`போலி அடையாள அட்டை; மிடுக்கான ஆபீஸர் உடை' - அமித் ஷா இல்லத்தைச் சுற்றிவந்த நபர் கைது

மும்பைக்கு இரண்டு நாள்கள் பயணமாக வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் அங்கு தங்கியிருந்தபோது அவரது இல்லத்தை மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து சுற்றி வந்தார். அவர் உள்துறை அமைச்சக பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுவது போன்ற ஒரு ரிப்பன் கட்டியிருந்தார். இதனால் அவர்மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அமித் ஷா தங்கியிருந்த பங்களா மட்டுமல்லாது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வீடுகளுக்கு வெளியிலும் தென்பட்டிருக்கிறார்.

அமித் ஷா

அவரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர், தான் உள்துறை அமைச்சக அதிகாரி என்று கூறிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மும்பை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். மும்பை போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை 3 மணி நேரத்தில் கைதுசெய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது அவர் பெயர் ஹேமந்த் பவார் என்று தெரியவந்தது. அவர் ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி ஒருவரின் பி.ஏ என்று தெரிவித்திருக்கிறார். அவரிடமிருந்தது போலி அடையாள அட்டை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, ஹேமந்த் பவாரைக் கைதுசெய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கைது

பவாரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனக்குப் பெரிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது என்பதை வெளியில் காட்டிக்கொள்ள இது போன்று பவார் நடந்துகொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பவாருக்குச் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் துலே என்று தெரியவந்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/fBIlPvh

Post a Comment

0 Comments