``அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் அல்ல; சிஸ்டம்தான் அவர்களை அப்படி மாற்றுகிறது!" - பாஜக அமைச்சர் பேச்சு

``அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் அல்ல, ஆனால் மக்களும் நாட்டின் சிஸ்டமும்தான் அவர்களை ஊழல்வாதிகளாக மாற்றுகிறது" என்று கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ஜே.சி.மதுசாமி தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் சர்சையைக் கிளப்பியிருக்கிறது.

பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில் சட்டம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஜே.சி.மதுசாமி. இவர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிவகுமார சிவாச்சாரியார் சுவாமிகளின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், ``இன்றைய காலகட்டத்தில் ஊழலற்ற வாழ்க்கை வாழ்வது ஒரு மேல்நோக்கிய பணியாகும்.

ஊழல்

ஏனெனில் அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மாற வேண்டும் என்று அமைப்பு கோருகிறது. அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் அல்ல, ஆனால் மக்களும் அமைப்பும்தான் அவர்களை அப்படி ஆக்குகின்றன. அதனால் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று கூறமாட்டேன், மக்கள்தான் அவர்களை இப்படி ஆக்கிவிட்டார்கள், ஓட்டு போடுவது முதல் விநாயகர் விழா வரை பல்வேறு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் அரசியல்வாதிகளிடம் பணம் வசூலித்து தொந்தரவு செய்கின்றனர்.

பாஜக அமைச்சர் ஜே.சி மதுசாமி

அழுத்தம் ஊழலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம், ஊழலில்லாமல் வாழ முடியும் என்று சொல்வது எளிதல்ல. அதனால்தான் சூழ்நிலை அரசியல்வாதிகளை ஊழல்வாதிகளாக மாற்றுகிறது. சிஸ்டம் நம்மைக் கெடுக்கிறது. அது நம்மைக் கெடுக்கவில்லை என்றால், நாம் ஊழல் செய்ய வேண்டியதில்லை. எல்லா அரசியல்வாதிகளிடமும் போதுமான பணம் இருக்கிறது. தேவை அதிகமாக இருக்கும்போது ஒருவருக்கு பணம் எங்கே கிடைக்கும் என்ற எண்ணம் தோன்றுவது சாதாரணமானது" என்றார்.

பா.ஜ.க அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.



from தேசிய செய்திகள் https://ift.tt/u1MdTlZ

Post a Comment

0 Comments