உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ஜ.க பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி என்பவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது பா.ஜ.க-வின் கிசான் மோர்ச்சா உறுப்பினரான ஸ்ரீகாந்த் தியாகி, சில தினங்களுக்கு முன்னர் நொய்டாவிலுள்ள கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் மரக்கன்றுகளை நட இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது விதிமீறலாக இருப்பதாக பெண் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்த வாக்குவாதம் இருவரிடையே மோதலாக மாறியது.
இதில் ஸ்ரீகாந்த் தியாகி, அந்தப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பின்னர் இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும், ஸ்ரீகாந்த் தியாகியைக் கைதுசெய்யக்கோரி கண்டனம் தெரிவித்தது. மேலும், இதில் பா.ஜ.க-வின் பெயர் அடிபட்டாலும், இந்த பிரச்னையிலிருந்து பா.ஜ.க சற்று விலகியே இருந்தது.
UP Noida Case: Where a women allegedly getting Abused by Srikanth tyagi...
— Abdul Aziz | عبد العزيز (@abdul_aziz744) August 8, 2022
: House of #SrikantTyagi is Getting Bulldozed !! pic.twitter.com/eaZkAhRqUl
இந்த நிலையில் உத்தரப்பிரதேச போலீஸ் தற்போது, நொய்டாவில் ஸ்ரீகாந்த் தியாகிக்குச் சொந்தமான சட்டவிரோத கட்டடங்களை இடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஸ்ரீகாந்த் தியாகியின் ஆதரவாளர்களையும் போலீஸார் கைதுசெய்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இருப்பினும் ஸ்ரீகாந்த் தியாகி மட்டும் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீகாந்த் தியாகி கட்டடம் புல்டோசரால் இடித்துத் தள்ளப்படும் வீடியோ ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, டெல்லி மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கேம்சந்த் ஷர்மா, ``நொய்டா நிர்வாகத்தால் அந்த நபரின் சட்டவிரோதக் கட்டுமானங்கள்இடித்துத் தள்ளப்படுகின்றன. ஸ்ரீகாந்த் தியாகிக்கு எதிராகக் கடுமையாகச் செயல்பட்டதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என ட்வீட் செய்திருக்கிறார்.
மேலும், இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக நொய்டா ஸ்டேஷன் இன்சார்ஜ் சுஜித் உபாத்யாய் பணியிடநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/QoiTKpO
0 Comments