கர்நாடக அரசின் சுதந்திர தின விளம்பரம்: நேரு படம் இடம்பெறாததற்கு சித்தராமையா கண்டனம்!

கர்நாடக மாநிலம், ஷிவமோகாவில் சுதந்திர தினத்தன்று பள்ளிவாசல் அருகே சாவர்க்கர் பட பேனர் வைக்கப்பட்ட விவகாரம் இருதரப்பினருக்கிடையே பெரும் கலவரத்தையே உண்டாக்கியது. அதாவது ஒரு பிரிவினர் சாவர்க்கர் பட பேனரை வைக்க... மற்றொரு பிரிவினர் திப்பு சுல்தான் படத்தை வைக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரிடையேயான இந்த மோதல் கலவரமாக வெடிக்க... ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குக் கத்திக் குத்து விழுந்திருக்கிறது.

கர்நாடக அரசின் விளம்பரம்

அதைத் தொடர்ந்து தற்போது அந்தப் பகுதியில் வரும் 18-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல ஆங்கில நாளிதழில் கர்நாடக அரசு வெளியிட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் அடங்கிய விளம்பரத்தில், முன்னாள் பிரதமர் நேருவின் படம் இடம்பெறாததற்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

சித்தராமையா

இந்த விகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியான பா.ஜ.க-வைச் சாடிய மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, ``அவர்களுக்கு வரலாறே தெரியாது. அதோடு வரலாற்றை அவர்கள் திரிக்க முயல்கிறார்கள். ஏன் சுதந்திரப் போராட்டத்தில் நேரு பங்கேற்கவில்லையா? இல்லை சுதந்திரப் போராட்டத்தின் போது ஈஸ்வரப்பா சிறைக்குச் சென்றாரா அல்லது முதல்வர் பசவராஜ் பொம்மை சிறைக்குச் சென்றாரா.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

அதுமட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ் அல்லது பா.ஜ.க சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதா? சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலிலிருந்து நேருவின் படத்தை நீக்கியது, நேருவை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும், அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையுமே அவமதிக்கும் செயல்" எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மேலும் இந்த விவகாரத்தில், ``இந்தியாவின் பிரிவினைக்கு நேரு காரணமென்பதால்தான் அவரின் படத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டார்கள்" என பா.ஜ.க தலைவர் ரவிக்குமார் குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/R8X7hdD

Post a Comment

0 Comments