நர்மதை ஆற்றில் மிதக்கும் சோலார் திட்டம்! நீர் சேமிப்புக்கும் உதவும்!

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறைகளில் சூழலுக்கு மிகவும் உகந்த முறையாக சோலார் பேனல்கள் கருதப்படுகிறது. ஒரு முறை சற்று செலவு செய்து சோலார் பேனல்களை அமைத்து விட்டால் போதும், மின்சாரத் தட்டுப்பாடு அதன் பிறகு இருக்காது. இந்நிலையில், மத்திய பிரதேச அரசு நர்மதை ஆற்றின் மீது மிதக்கும் சோலாரை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

Electricity savings

அதாவது உலகின் பெரிய மிதக்கும் சோலார் திட்டத்தை செயல்படுத்த முதல்கட்ட ஒப்பந்தம், கடந்த வியாழன் அன்று மத்திய பிரதேச அரசால் கையெழுத்திடப்பட்டது.

நர்மதை ஆற்றின் ஓம்காரேஷ்வர் அணையில் அமைக்கவிருக்கும் இந்த சோலார் பிளான்ட் உலகில் உள்ள 10 மிதக்கும் சோலார் பிளான்டில் ஒன்றாக இருக்கும். 600 மெகாவாட் திறன் கொண்டது, அமைக்கவிருக்கும் இந்த கட்டமைப்பு உலகின் மிகப்பெரிய சோலார் திட்டமாகும்.

இந்த திட்டம் குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறுகையில், ‘'தண்ணீரின் மேற்பரப்பில் சோலார் பேனல்கள் அமைக்கப்படுவதால் நீர் ஆவியாவதில் இருந்து தடுக்கப்படும். இதன் மூலம் 60 லிருந்து 70 சதவிகித நீர் சேமிக்கப்படும். இந்த நீரின் அளவானது போபாலில் வசிக்கும் மக்களின் 124 நாட்களின் குடிநீருக்கு சமமானது.

சிவராஜ் சிங் சௌகான்!

மேலும், நீரின் மீது பாசி உருவாவது குறைவதோடு, நீரானது குடிக்கும் நீரின் தரத்தோடு இருக்கும். இந்த சோலார் பேனல்களை அமைப்பதற்கு எந்த நிலப்பரப்பும் தேவையில்லை, எந்த மக்களையும் இடம்பெயர வைக்கவும் தேவையில்லை. 2027 ல் மத்திய பிரதேசத்தின் புதுப்பிக்கதக்க ஆற்றல் திறன் 20,000 மெகாவாட்டாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/a4YtvHV

Post a Comment

0 Comments