கேரளா: கனமழை; கரைபுரண்டோடிய வெள்ளம்... சிக்கிய காட்டுயானை - திக்... திக்... நொடிகள்!

காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக கேரளாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தால் கேரளாவில் தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கேரளா மழை

ஆங்காங்கே நிலச்சரிவு, வீடுகள் இடிந்து விழுவது எனக் கடுமையானச் சேதத்தை சந்தித்துவருகிறது கேரளா. பல்வேறு பகுதிகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

கேரளாவில் மீண்டும் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்மழை காரணமாக அங்கிருக்கும் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சூர் மாவட்டம், அதிரப்பள்ளி அருகே சாலக்குடி ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் ஓர் ஆண் காட்டுயானை சிக்கிக்கொண்டது.

வெள்ளத்தில் சிக்கிய யானை

வெள்ளத்திலிருந்து மீண்டுவர முடியாமல் அந்த யானை தவித்தது. கனமழை காரணமாக அங்கு 5 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது.

ஒருகட்டத்தில் யானை வெள்ளநீரைச் சமாளிக்க முடியாமல் கடுமையாகத் திணறியது. அதிஷ்டவசமாக அங்கிருந்த ஒரு மரத்தின் அருகே யானை பாதுகாப்பாக நின்றுகொண்டது. யானை சிக்கியிருக்கும் தகவல் தெரிந்தவுடனே வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய யானை

அவர்களின் தொடர் முயற்சி காரணமாக யானை சில மணி நேரங்களில் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.



from தேசிய செய்திகள் https://ift.tt/z63FYdm

Post a Comment

0 Comments