உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி கான்ஸ்டபிள் ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காவலர் மனோஜ் குமார் என்பவர் பொதுமக்கள் முன்னிலையில் கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன் தனது சோகமான நிலையை வெளிப்படுத்தினார். அவர் கையிலிருந்த தட்டில் சில ரொட்டிகளும், கொஞ்சம் சாதமும், பருப்பும் இருந்தது.
அதனை கையில் வைத்தபடி, சாலையில் போராட்டம் நடத்திய காவலர், "ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும்.
The state of affairs this Constable is indicating is not only true of UP but many parts of India where working conditions of lower constabulary are very poor. Ration allowance is provided, then why is there such a situation? Mismanagement by police mess is not a political issue. pic.twitter.com/97GeNz5icO
— Shesh Paul Vaid (@spvaid) August 11, 2022
எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. விலங்குகள்கூட இதை சாப்பிடாது.... என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி, பணியை விட்டு நீக்க மூத்த காவல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்’’ என்றார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு பலரும், அந்தக் காவலருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக உ.பி போலீஸ் உயரதிகாரிகள் காவலரின் புகார் குறித்தும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உணவின் தரம் குறித்து வீடியோ பதிவிட்ட காவலர் மனோஜ் குமாரை காவல்துறை உயரதிகாரிகள் கட்டாய பணி விடுப்பில் அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாகப் பேசிய காவலர் மனோஜ்குமார், ``நான் பதிவிட்ட வீடியோ வைரலானதை அடுத்து, உயரதிகாரிகள் என்னை ஒரு அறையில் அடைத்துவைத்து உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்தனர். அவர்கள் என்னை ஒரு பித்துபிடித்தவனைப் போல மாற்றுவதற்கு முயன்றனர். என்னுடைய செல்போனையும் பிடுங்கி அதிலிருந்த அனைத்தையும் அழித்துவிட்டனர்" எனக்கூறினார்.
ஆனால், மனோஜ்குமாரின் குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/nIkftv0
0 Comments