மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனாவில் உள்ள போர்சா சுகாதார மையத்துக்கு ஒரு பெண் தலையில் அடிபட்ட நிலையில் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக, அந்தப் பெண்ணின் தலையில் காண்டம் ரேப்பரை வைத்து கட்டியிருக்கின்றனர்.
அந்தப் பெண்ணுக்கு வலி அதிகமாக இருந்ததால் மொரேனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது மருத்துவர்கள் அவருடைய தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை பிரித்து பார்த்தபோது தலையில் ரத்தக் கசிவை தற்காலிகமாக நிறுத்துவதற்காக காண்டம் ரேப்பரை வைத்திருப்பது தெரியவந்தது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணிடம் இது குறித்து தெரிவித்திருக்கின்றனர். பின்னர் அந்தப் பெண் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். போலீஸார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இந்தப் பெண்ணுக்கு தவறாக சிகிச்சை வழங்கிய அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தப் பெண் சிகிச்சை பெற்றபோது டாக்டர் தர்மேந்திர ராஜ்பூத் அவசரப் பணியில் இருந்தாகவும், அவர் வார்டு பாய் அனந்த் ராம் என்பவரிடம் காட்டன் பேடுகளை தலையில் வைத்து கட்டுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வார்டு பாய் அலட்சியமாக காண்டம் ரேப்பரை வைத்துக் கட்டியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/9r7dbWe
0 Comments