திருமணம் தாண்டிய உறவுகள் அதிகமான நேரங்களில் விபரீதமாகவே முடிவதுண்டு. அது கொலையாகவோ அல்லது வேறு நினைத்துப் பார்க்க முடியாத சம்பவமாகவோ இருக்கலாம். உத்தரப்பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் லகிம்புர் கெரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் பெண் சுனிதா (36) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் விவசாயக் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இவர் கணவர் சுனிதாவை விட்டு பிரிந்துவிட்டார். இதனால் சுனிதா தன் 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், சுனிதாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 32 வயது நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தத் தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது. கணவர் இல்லாத காரணத்தால் சுனிதா தன்னுடன் பழகிய நபரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு திருமணம் செய்யாமல் வாழ்ந்துவந்தார். பகல் நேரத்தில் சுனிதா பொதுவாக விவசாய வேலைக்குச் சென்றுவிடுவார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் மகள் வீட்டில் தனியாக வசிப்பது வழக்கம். சம்பவத்தன்று சுனிதா தோட்ட வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்குள் நுழையும்போது சுனிதாவின் மகளை அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தார். அதனைத் தடுக்க சுனிதா முயன்றார். அவர் முயற்சி பலனலிக்கவில்லை. இதனால் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க வீட்டின் சமையல் அறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தவரின் மர்ம உறுப்பை வெட்டி எடுத்துவிட்டார். இதனால் அந்த நபர் உதவி கேட்டு சத்தம் போட்டார். அக்கம் பக்கமுள்ளவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் லகிம்பூர் போலீஸ் அதிகாரி, ``சம்பந்தப்பட்ட நபர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர்மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார். காதனுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்தபெண் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``என் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அதனைத் தடுக்க முயன்றேன். என்னையும் தாக்கினார். எனவே வேறு வழியில்லாமல் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆணுப்பை அறுத்துவிட்டேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZF30gQa
0 Comments