திடீரென வந்த நிர்வாண வீடியோ கால்: இரண்டு முதியவர்களை மிரட்டி ரூ.3.64 லட்சம் பறித்த மர்ம பெண்!

மும்பை அந்தேரியை சேர்ந்த 86 வயது முதியவருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி மர்ம நம்பரில் இருந்து வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. வீடியோ காலை எடுத்த போது காலில் பெண் ஒருவர் நிர்வாணமாக காட்சியளித்த படி பேசினார். உடனே முதியவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீடியோ கால் பதிவை அப்பெண் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து அப்பெண் அந்த வீடியோவை சமூக வலைத்தளதில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டினார். அவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டுமானால் 3 லட்சம் தரவேண்டும் என்று கூறி அப்பெண் மிரட்டினார். முதியவரும் வேறு வழியில்லாமல் தனது இரண்டு வங்கி கணக்கில் இருந்து 2.99 லட்சத்தை அப்பெண் சொன்ன வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு இது குறித்து முதியவர் அம்போலி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆபாச வீடியோ

இதே போன்று மும்பையை சேர்ந்த மற்றொரு முதியவருக்கும் இதே முறையில் மர்ம பெண்ணிடமிருந்து நிர்வாண வீடியோ கால் வந்தது. முதியவர் போனை எடுத்து பேசிய போது அதனை பதிவு செய்துகொண்டு பணம் கேட்டு மிரட்டினார். முதியவரும் அப்பெண்ணிற்கு ரூ.64 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். இது குறித்து அவரும் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இரண்டு முதியவர்களிடமும் மோசடி செய்தது ஒரே பெண்தானா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது போன்ற மோசடிகள் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. இதையடுத்து போலீஸார் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இருவரும் பணத்தை அனுப்பிய வங்கி யாருக்கு சொந்தம் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/54M3eFr

Post a Comment

0 Comments