மும்பை: ரூ.1,400 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்... கெமிக்கல் இன்ஜினீயர் உட்பட 5 பேர் கைது!

மும்பை அருகிலுள்ள நாலாசோபாரா என்ற இடத்தில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் தனிப்படை போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக கூறப்படும் இடத்தில் ரெய்டு நடத்தினர். இதில் மெபெட்ரோன் என அழைக்கப்படும் எம்.டி போதைப்பொருள் தயாரிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு 1,400 கோடி ரூபாய் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். போதைப்பொருளை தொழிற்சாலையில் தயாரித்தது தொடர்பாக மும்பையில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி போதைப்பொருள் தயாரித்த தொழிற்சாலை இருந்த நாலாசோபாராவில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

போதைப்பொருள்

அவர்தான் போதைப்பொருள் தயாரிக்க மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது. நாலாசோபாராவில் கைதுசெய்யப்பட்ட நபர் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தனக்கு தெரிந்த படிப்பை பயன்படுத்தி போதைப்பொருள் தயாரித்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் போதைப்பொருளை தயாரித்து எங்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் தயாரிப்பில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

கைது

கடந்த மார்ச் மாதம் மும்பை கோவண்டி போலீஸார் எம்.டி போதைப்பொருளுடன் ஒருவனைக் கைதுசெய்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் தற்போது இந்த அளவுக்கு போதைப்பொருள் பிடிபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். எம்.டி போதைப்பொருள் பொதுவாக அதிக அளவில் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவதுண்டு. இது ஒரு வகை ரசாயான பவுடராகும். இதற்கு மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் தடை விதித்தது. இதே போதைப்பொருளை பாலிவுட் நடிகை ஒருவர் தன்னுடைய கனவருடன் சேர்ந்துகொண்டு மும்பைக்கு வெளியில் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/poMCgcx

Post a Comment

0 Comments