மும்பை: எலி மருந்து கலந்த தக்காளி; தவறுதலாக நூடுல்ஸில் கலந்து சாப்பிட்ட பெண் பரிதாப பலி!

மும்பை மலாடு பகுதியில் உள்ள பாசில்வாடியில் தனது கணவன், மைத்துனருடன் வசித்து வசித்தவர் ரேகா நிஷாத் (30). அவர்களின் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் எலிகளுக்கு வீட்டில் மருந்து வைத்தார். தக்காளியுடன் எலி மருந்தை கலந்து வீட்டில் வைத்தார். இந்த நிலையில் அது குறித்து அறியாமல், அதே தக்காளியை தவறுதலாக வீட்டில் சமையலுக்கு ரேகா பயன்படுயுள்ளார். கடையில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து சமைத்த போது அதில் தக்காளியை வெட்டிப்போட்டிருக்கிறார்.

நூடுல்ஸை சாப்பிட்ட சில நாளில் ரேகாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவர் சதாப்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீஸாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் ரேகாவிடம் வாக்குமூலம் வாங்கினர்.

நூடுல்ஸ்

அவர் நூடுல்ஸ் சாப்பிட்ட விபரத்தை தெரிவித்தார். இதனிடையே கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த ரேகா சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். நூடுல்ஸ் சாப்பிட ஆசைப்பட்டு தனது உயிரை ரேகா இழந்துள்ளார். அவர் நூடுல்ஸ் தயாரிக்கும் போது போனில் பேசிக்கொண்டே சமைத்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து ரேகாவின் கணவர், மைத்துனரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ரேகாவின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருப்பதால் போலீஸார் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/cQ3dAjr

Post a Comment

0 Comments