ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாகிஸ்தான் நாட்டவர் உட்பட குறைந்தது மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாரும், ராணுவத்தினரும் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகளுடனான கடுமையான துப்பாக்கிச்சூட்டின்போது இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் `ஆக்சல்' கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக அதிகாரிகள், ``பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, பஜாஜ், ஆக்சல் என்ற இரண்டு மோப்ப நாய்கள், பாடிகேம்களை அணிந்து குறிவைக்கப்பட்ட வீட்டிற்குள் அனுப்பப்பட்டன. பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையின் போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் ஆக்சலை சுட்டார்கள். அதையடுத்து ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். மேலும் `ஆக்சல்' என்ற மோப்ப நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது'' எனத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/kzDOKtn
0 Comments