பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாக, ``பா.ஜ.க வாரிசு அரசியலுக்கு எதிரான கட்சி" எனவும், "வாரிசு அரசியலை ஒழிக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியும்!" என்றும் பிரசாரம் செய்து வருகின்றனர். தேசியளவில் காங்கிரஸ், தி.மு.க என பல்வேறு கட்சிகள் வாரிசு அரசியலில் மூழ்கிக் கிடக்கின்றன எனக் குற்றம்சாட்டி வரும் பா.ஜ.க, கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி கட்சியை `அப்பா-மகன் கட்சி' எனவும், அவரை `லக்கி டிப் சி.எம்' என்றும் விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, பா.ஜ.க-வின் கர்நாடக பிரிவில் மட்டும் 16 வாரிசுகள் இருப்பதாக பட்டியலிட்டு அந்தக் கட்சியை சாடியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் லக்கி டிப் சி.எம் என குறிப்பிடுகிறீர்கள். ஆம் நான் லக்கிதான். அதே போல உங்கள் முதல்வர் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? அவரும் லக்கி சி.எம் தானே?
குடும்ப ஆட்சியைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? நான் ஏற்கெனவே வாரிசு அரசியல் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். மீண்டும் உங்கள் கவனத்துக்கு...
1. எடியூரப்பா & சன்ஸ்
2. ரவி சுப்ரமணி-தேஜஸ்வி சூர்யா
3. அசோக-ரவி
4. வி.சோமன்னா-அருண் சோமன்னா
5. அரவிந்த் லிம்பாவலி-ரகு
6. எஸ்.ஆர்.விஸ்வநாத்-வாணி விஸ்வநாத்
7. ஜகதீஷ் ஷெட்டர்-பிரதீப் ஷெட்டர்
8. முருகேஷ் நிராணி-ஹனுமத் நிராணி
9. ஜி.எஸ்.பசவராஜு-ஜோதி கணேஷ்
10. ஜார்கிஹோலி குடும்பம்
11. கட்டி குடும்பம்
12. ஜோல்லே குடும்பம்
13. அங்காடி குடும்பம்
14. உதாசி குடும்பம்
15. ஸ்ரீராமுலு குடும்பம்
16. ரெட்டி சகோதரர்கள்
உங்கள் குடும்ப ஆட்சி பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது. பா.ஜ.க என்பதே குடும்ப அரசியலின் சங்கிலித் தொடர் என்பதை நான் அறிவேன். கர்நாடகாவில் மட்டுமே இந்த பட்டியல். பா.ஜ.க-வில் உள்ள நாடு தழுவிய வாரிசு அரசியலை நான் அம்பலப்படுத்தட்டுமா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/KSJdsRD
0 Comments