மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியார் பகுதியில் வசிப்பவர் பிரியங்கா குப்தா. இவரின் இல்லத்தின் மின் கட்டணம் செலுத்தத் தொகை எவ்வளவு என விசாரித்த போது, மின்சார வாரியம் ரூ. 3,419 கோடி எனத் தெரிவித்துள்ளது. அப்போது அருகில் இருந்த பிரியாங்கா குப்தாவின் மாமனார் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, பிரியங்கா குப்தா-வின் கணவர் சஞ்சீவ் கன்கனே மின் கட்டணம் தொடர்பாக விசாரித்த போதுதான் கட்டண குழப்பம் தொடர்பான முழு தகவலும் தெரியவந்துள்ளது. இந்த கட்டண விவரம் தொடர்பாக மத்தியப் பிரதேச மத்திய க்ஷேத்ரா வித்யுத் வித்ரன் நிறுவனத்தின் சரிபார்ப்பு நடந்தது.
அதில், அந்த 3,419 என்ற எண்ணிக்கையில் நுகரப்பட்ட யூனிட்டுகளுக்குப் பதிலாக ஊழியர் ஒருவர் நுகர்வோர் எண்ணை உள்ளிட்டதால், அதிகத் தொகையுடன் பில் வந்துள்ளது. எனவே, இது ஊழியரின் தவறு. பின்பு திருத்தப்பட்ட சரியான தொகையிட்ட மின்கட்டண பில் ரூ.1,300 வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப்பிரதேச எரிசக்தித் துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் செய்தியாளர்களிடம், "தவறு சரிசெய்யப்பட்டுச் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/JQ8zpKA
0 Comments