தமிழ்நாட்டில் வாலை நீட்டுகிறாரா தமிழிசை..? கடு கடுக்கும் திமுக!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கவர்னர் ஆர்.என். ரவிதான் தனது பேச்சின் மூலம் சீண்டி வந்தார் என்றால், தற்போது தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனும் எல்லை தாண்டி தமிழ்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக திமுக தரப்பு கொதிப்பதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழக கவர்னராக ஆர்.என். ரவி பொறுப்பேற்ற சில வாரங்களிலிருந்தே திமுக அரசுக்கும், கவர்னர் மாளிகைக்குமான மோதல் தொடங்கி விட்டது. குறிப்பிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதில் தொடங்கிய இந்த மோதல் நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் நீண்டநாட்களாக கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியபோது உச்சத்துக்குச் சென்றது.
தொடர்ந்து கவர்னர் ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் ஆவேசமான கருத்துகளை வெளிப்படுத்தி, அவரைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பின்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில், கவர்னரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் சில காட்டமான கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த மசோதாவை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனாலும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள், கல்லூரி விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசுவது, சனாதனத்தை உயர்த்திப் பேசுவது, இந்தி மொழிக்கு ஆதரவான கருத்து என ரவியின் பேச்சுகள், நடவடிக்கைகள் தொடர்ந்து திமுக அரசைச் சீண்டுவதாகவே இருந்தது.
சமீபத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் முருகனை பங்கேற்கச் செய்தது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை எனக் குற்றம் சாட்டி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதனைப் புறக்கணித்தார். இது தொடர்பாக சர்ச்சை வெடித்து, திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் எழுந்தன.
இந்த நிலையில், இந்த விவகாரம் ஓய்வதற்குள் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளைத் திறப்பதை தடுப்பது ஏன் என்றும், நவதோய பள்ளிகளில் எங்கே இந்தித் திணிப்பு உள்ளது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், சமூகநீதி பேசிக்கொண்டிருக்கும் சிலர், சமூகநீதியைப் பெயரளவில் மட்டுமே கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் வாக்களிக்காமல் இருந்தது ஓர் உதாரணம் என்றும் பேசி இருந்தார்.
தமிழிசையின் இந்த கருத்து ஆளும் திமுக அரசையும் அந்தக் கட்சியினரையும் கொதிக்க வைத்துள்ளது. அண்டை மாநிலத்தின் கவர்னராக இருந்துகொண்டு, இப்படி தமிழ்நாட்டு விவகாரங்களில் தலையிடலாமா எனக்கேட்டு திமுகவின் அதிகாரபூர்வ ஏடான 'முரசொலி' யில் காட்டமான கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
" புதுவை மாநில ஆளுநர் தமிழிசை, எல்லை தாண்டி தமிழகத்துக்குள் மூக்கை நுழைத்துப் பார்க்கிறார். சமயம் கிடைக்கும்போது வாலை நீட்டி ஆழம் பார்த்திடவும் முயற்சிக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ரவி, அவரது எல்லைக்குள் வரம்பு மீறி செயல்படுகிறார் என்றால், தமிழிசை எல்லை தாண்டி வரம்பு மீறுவதும், வாலை நீட்டுவதும் தமிழக ஆளுநராக இருக்கும் ரவிக்கும் கூட கோபத்தை உருவாக்கக்கூடும்.
நவோதயா பள்ளிகளில் அனுமதியே நுழைவுத் தேர்வு மூலம்தான். அந்தத் தேர்வில் யாரால் வெற்றி பெற இயலும்? தமிழிசைக் கூறுவாரா?
எட்டாம் வகுப்புப் பின் ஆங்கிலமும் இந்தியும்தான் என்பது இந்தித் திணிப்பல்லவா? பதவி மோகத்தில், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவதை புதுவை ஆளுநர் உணர்ந்து, தன்னை திருத்திக் கொள்வது நல்லது. 'முந்திரிக்கொட்டை' பேச்சுகள் தனக்குதானே மூக்குடைபடும் நிலையை உருவாக்கிடும் என்பதை உணர்வாராக..!" எனக் காட்டமான விமர்சனம் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், 'முரசொலி'யின் இந்தக் கட்டுரைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கும் கருத்தைப் படிக்க க்ளிக் செய்க...
ஜனாதிபதியாக பதவியேற்றார் திரெளபதி முர்மு... - 'பெண்கள் நலனில் தனிக் கவனம்!'
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார். தலைமை நீதிபதி ரமணா, திரெளபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்மு, நாட்டின் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா குறித்த விரிவான தகவல்கள், மற்றும் பதவியேற்புக்குப் பின்னரான திரெளபதி என்ன பேசினார் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...
ப்ளஸ் டு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை; தொடரும் விபரீதங்கள்..!
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்து வந்த ப்ளஸ் டு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து மாணவிகள், குறிப்பாக 12 -ம் வகுப்பு பயிலும் மாணவிகளின் விபரீத மரணங்கள் தொடர்கதையாகி வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
' ரஜினிகாந்த்துக்கு விருது... வழங்கியதில் எந்த நியாயமும் இல்லை!'
"பெரும்புகழ் பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்பட்டதை ஓர் அரசியல் வியூகமாகத்தான் பார்க்க முடிகிறது. வரி கட்டுவதை வைத்து மட்டும் அவர்களது உண்மையான வருவாயைத் தீர்மானித்து விட முடியாது.
வரி செலுத்துவதென்பது குடிமக்களாகிய நம் அனைவரின் கடமை என்பதோடு சட்டப்படி அனைவரும் வரி கட்டியே ஆக வேண்டும் என்கிற சூழலில், அதிக வரி செலுத்தியதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுக்கு விருது கொடுப்பது முறையானதா..?" என்ற ரீதியில் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான விரிவான கருத்துகளைப் படிக்க க்ளிக் செய்க..
கேரளாவில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்: கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் பன்றிகள்!
ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் எளிதாகப் பிறருக்குப் பரவக் கூடிய ஒருவித வைரஸ் தொற்று. இது காட்டுப் பன்றிகளையும், வீட்டில் அல்லது பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளையும் பாதிக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு போதுமானதாக இல்லாததால் மூக்கு, காதுகள், வால் மற்றும் கால்களின் கீழ் தோல்பகுதியானது ஊதா நிறமாக மாறும். காய்ச்சல் அதிகரித்து மூக்கு மற்றும் கண்களில் இருந்து திரவம் வெளியேறும்.
வரிச் சேமிப்புக்கான ஃபிக்ஸட் டெபாசிட்... யாருக்கு எது ஏற்றது?
வருமான வரியை மிச்சப்படுத்த முதலீடு செய்யக்கூடிய திட்டங்களில் ஒன்றாக வங்கிகளின் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.
"வாழ்க்கையில செகண்ட் ஷோ கிடையாது!" - மகேந்திரன்
இந்த முறை இளையராஜா, பி.சி. ஸ்ரீராம், லெனின் என்று பெரும்படையுடன் வருகிறார். அவரது அடுத்த படமாக ' சாசனம்' அறிவிக்கப்பட்டிருக்கிறது. செட்டிநாட்டு வாழ்வை செல்லுலாய்டில் சித்திரிக்கப்போகிற முதல் படமாக இது அமையக்கூடும். ராஜா அண்ணாமலைபுரத்தில், திரும்பிய பக்கமெல்லாம் செம்பருத்திப் பூக்கள் சிரிக்கிற வீட்டில், இயக்குநர் மகேந்திரனைச் சந்தித்தோம்.
"ஒவ்வொரு பொழுதும் விடியறது ஒரு புதுப் புத்தகம் விரியற மாதிரி. பொழுது முடியறதுக்குள்ள அதை எவ்வளவு தூரம் படிக்க முடியுமோ அதை முடிச்சிடணும்னு நினைக்கிறேன்.... சினிமா நான் திட்டமிட்டு வந்த விஷயமில்லை. இது எனக்கு விதிக்கப்பட்டதுனு நினைக்கிறேன். Life is like a snooker game நாம நினைக்கறது ஒண்ணு நடக்கறது ஒண்ணுன்னு. ஆனா, அந்த சர்ப்ரைஸ் அல்லது ஷாக்தானே வாழ்க்கையோட சுவாரஸ்யமே..." என்று சிரிக்கிறார் மகேந்திரன்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! - 1997ல் விகடனுக்காக இயக்குநர் மகேந்திரன் அளித்த சுவாரஸ்யப் பதிவைப் படிக்க க்ளிக் செய்க...
from தேசிய செய்திகள் https://ift.tt/xZ3LkTr
0 Comments