கர்நாடகா துமகூரில் உள்ள ஜெயநகரைச் சேர்ந்த அர்ஜுன்மற்றும் அவரின் குடும்பத்தினர் பறவைகள் மற்றும் விலங்குகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஆப்பிரிக்க வகையைச் சேர்ந்த ரியோ மற்றும் ருஸ்துமா எனும் ஆண், பெண் காதல் ஜோடிக் கிளிகளை வளர்த்து வந்துள்ளனர். இந்தவகை ஆப்பிரிக்கக் கிளிகள் பெரும்பாலும் மத்திய ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இந்தக் கிளிகள் கிட்டத்தட்ட 5 வயதுக் குழந்தைக்குச் சமமான அறிவாற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த அரியவகை கிளிகளை அன்புடன் வளர்த்து வந்த இந்தக் குடுபத்தினர் ஒவ்வொரு வருடமும் இதன் பிறந்த நாளைக் கொண்டாடி தங்கள் குடும்பத்தில் ஒருவர்போல பார்த்துப் பார்த்து வளர்த்துள்ளனர். இவர்கள் இப்படி ஆசை ஆசையாக வளர்த்த ஜோடிக் கிளிகளில் இருந்த 'ருஸ்துமா' எனும் பெயரிடப்பட்ட ஆண் கிளி ஒன்று எதிர்பாராதவிதமாக கடந்த ஜூலை 16-ம் தேதி அன்று காணாமல் போய்விட்டது.
Rustuma with his best friend pallavi pic.twitter.com/0BjrRWQkDf
— Rohini Swamy (@Rohini_Swamy) July 19, 2022
இதனால் அதிர்ச்சியான அக்குடும்பத்தினர் தொலைந்த கிளியைத் தேடி அலைந்துள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் அந்தக் கிளியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதன் பெண் ஜோடிக்கிளியும் மிகுந்த சோகத்தில் முகம் வாடிப்போய்விட்டது. இப்படியே நாள்கள் கடந்ததால் ஆண் கிளி காணாமல்போன சோகத்தில் பெண் கிளியும் இறந்துபோய்விடும் என்று எண்ணிய அக்குடும்பத்தினர் தொலைந்த கிளியைத் தேடுவதில் இன்னும் தீவிரம் காட்ட முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் 'காணாமல்போன கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்து, தொலைந்த கிளியின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பது, பேனர்கள் வைப்பது, சமூகவலைதளங்களில் பகிர்வது எனப் பல்வேறு வகையில் முயன்றுவருகின்றனர். ஒரு கிளியைக் கண்டு பிடிக்க இவ்வளவு பாசப்போராட்டமா என வியந்த நெட்டிசன்கள் இதைச் சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்துவருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/xd5WAUb
0 Comments