மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம், நாராயண்புரா பதர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவன் திபேந்திரயாதவ் (வயது 5). இந்த சிறுவன் தன் குடும்பத்தினரோடு வயல்வெளிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு திறந்தவெளியில் கிடந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுவன் தவறி விழுந்தான்.
சிறுவனைக் கானாமல் குடும்பத்தினர் அகம், பக்கத்தில் தேடியிருக்கின்றனர். அப்போது ஆழ்துளை கிணற்றிலிருந்து சத்தம் கேட்டதால், சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குடும்பத்தாருக்கு தெரியவந்தது. அதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவருக்கு முதற்கட்டமாக சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
பின்னர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டினார்கள். அதன் மூலம் சிறுவன் இருக்கும் இடத்தை நெருங்கிய மீட்புக் குழுவினர், கேமரா மூலம் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து... சுமார் 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுவனை உயிருடன் மீட்டனர். தற்போது அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை துரிதமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/DcOduCV
0 Comments