மும்பை மாநகராட்சியில் பொறியாளர்களாக இருப்பவர்கள் அமோல் தவில், தத்தாத்ரேய மானே. தற்போது மும்பையில் பருவ மழை தீவிரம் அடைந்திருப்பதால் நானாசோக் பகுதியை சேர்ந்த துக்காராம் என்பவர் மழை தடுப்புக்காக தற்காலிக ஷெட் ஒன்றை கட்ட திட்டமிட்டு இருந்தார். இதற்கு அவர் மாநகராட்சி அதிகாரிகள் மானே, தவில் ஆகியோரை சந்தித்து அனுமதி கேட்டார். உடனே அனுமதி கொடுக்கவேண்டுமானால் ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்குள் பேரம் பேசப்பட்டதில் ரூ.1.90 லட்சம் கொடுப்பது என்று முடிவானது. அப்பணத்தை கொடுக்க விரும்பாத துக்காராம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.
அவர்கள் சொன்னபடி சொன்னபடி துக்காராம் லஞ்ச பணத்தை எடுத்து சென்று மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த பொறியாளர் மானேயிடம் கொடுத்தார். உடனே மறைந்திருந்த அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அதோடு மானே மூலம் போன் செய்து மற்றொரு பொறியாளர் அமோலிடம் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அலுவலகத்தில் இருந்த அமோல் மேஜை டிராயரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
லஞ்சப்பணத்தை வாங்கி அப்படியே டிராயரில் வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது 17.64 லட்சம் அளவுக்கு இருந்தது. இதையடுத்து அமோலும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மேலும் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கின்றனர் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றன்ர்.
மும்பையில் சட்டவிரோதமாக குடிசைகள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் அனுமதி கொடுத்து லஞ்சம் வாங்குகின்றனர். குடிசைகள் கட்டி முடிக்கப்பட்ட சில ஆண்டுகளில் அரசு அதனை அங்கீகரித்து விடுகிறது. இதையடுத்து அதனை விற்பனை செய்துவிட்டு வேறு இடத்தில் குடிசை அமைக்க சென்றுவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/lz2VC1e
0 Comments