அதிரடி காட்டும் அண்ணாமலை... திமுக நிதானம் காப்பது ஏன்?
``அரசு தங்கள் கையிலிருக்கும் மூன்றாண்டுகள் மட்டும் தி.மு.க தப்பிக்கலாம். மின்துறை அமைச்சர் தப்பிக்க முடியாது. அரசு மாறும்போது முதல் கைது செந்தில் பாலாஜிதான்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார்.
முன்னதாக அண்மையில், "சுகாதாரத்துறை அமைச்சர் தொழில்நுட்ப வல்லுநர் கிடையாது; அரசியல்வாதி. மக்களைத் திசை திருப்பும் அமைச்சர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ.க வெளியிட்ட ஆவணத்துக்குப் பதில் அளிக்க வேண்டும்” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதும் காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
மேலும், "மாதம் ஒரு முறை அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்!" என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவரது இந்த தொடர் 'அட்டாக்'கிற்கு ஒரு சில அமைச்சர் இலேசாக ரியாக்ட் செய்தாலும், கட்சி மட்டத்தில் பெரிதாக எதிர்ப்புகள் வெளிப்படவில்லை.
அதிமுக அப்டேட்ஸ்: பலே வியூகம்... பலே எடப்பாடி!
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஜூன் 14-ம் தேதி நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான், ஒற்றைத் தலைமை விவாதம் வெடித்தது. மா.செ கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பேசப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதால், ஒட்டுமொத்த தமிழக அரசியலில் இது பேசுபொருளானது.
அதேபோல, தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸும், இ.பி.எஸும் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதால், ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 7 நாள்களாக கொளுந்துவிட்டும் எரிகிறது.
தேர்வு முடிவுகள் ரவுண்டப்: 10, 12 ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது?
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வதிலும், மதிப்பெண்களைத் தெரிந்துகொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து தங்களது மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில், 10, 12 ம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...
கேரள இளம் பெண் ஐ.எஸ் அமைப்புக்கு மூன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை?
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று அதிக சம்பள ஆசைகாட்டி பெண்களை அரபு தேசங்களுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. டெய்லரிங், நர்ஸிங் உள்ளிட்ட வேலைகளுக்கு என அழைத்துச் சென்று அவர்களை வீட்டு வேலை செய்ய அடிமைகளாக விற்பனை செய்த கொடுமை தற்போது அம்பலமாகியிருக்கிறது.
பாலசந்தர் `தைரியம்'... பாக்யராஜ் `கேரக்டர்'... பாரதிராஜா `அழுத்தம்'! #VikatanVintage
'வறுமையின் நிறம் சிவப்பு' - கே.பாலசந்தர்,
'மௌன கீதங்கள்' - கே.பாக்யராஜ்,
'பாலைவனச் சோலை' - ராபர்ட்-ராஜசேகரன்,
'அலைகள் ஓய்வதில்லை' - பாரதிராஜா -
'ஆகஸ்ட் 80 முதல் ஆகஸ்ட் 81' வரை விகடனில் வெளியான சினிமா விமர்சனங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் (50-க்கு மேல்) பெற்ற படங்கள் இவை. வாசகர்களின் சார்பாகப் பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த நான்கு படங்களின் டைரக்டர்களை விகடன் அலுவலகத்துக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தோம். அவர்களும் எங்கள் அழைப்பை ஏற்று அலுவலகம் வந்து கௌரவித்தார்கள்.
''உங்கள் படம் வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே நீங்கள் எதிர்பார்த்தீர்களா? என்னென்ன காரணங்களுக்காகப் படம் வெற்றி அடையும் என்று நினைத்தீர்கள்? எதிர்பார்த்த நல்ல அம்சங்கள் எல்லாம் பாராட்டப்பெற்ற னவா? பாராட்டப்படாத அம்சம் ஏதாவது உண்டா? வரப்போகும் உங்களுடைய படங் களுக்கு எந்த விதத்தில் இந்த வெற்றி பயன் தரப் போகிறது?'' என்று கேள்விகள் கேட்டு டைரக்டர்களின் கருத்துக்களை அறிய விகடன் விமர்சனக் குழு விரும்பியது. 'என்னைப் பொறுத்தவரை என் படத்தைப் பற்றி நான் கூற விரும்புவது இதுதான்...' என்று அந்த டைரக்டர்கள் மனம் திறந்து பேசினார்கள்.
"நடிக நடிகையருக்கு அதிக பணம் தரமாட்டேன்!" - விட்டலாச்சார்யா #Classics
அனிமேஷன் இல்லாத காலத்துலேயே பின்னியெடுத்தவர். போஸ்டர்களில் விட்டலாச்சார்யாவின் பெயரைக் கண்டாலே, யார் நடித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ரசிகர்கள் 'பொழுது போகும்!' வேடிக்கையாக இருக்கும் என்ற நம்பிக்கை யோடு படம் பார்க்க வந்தனர். சினிமாவில் லாஜிக் பார்ப்பவர்களுக்குக் கூட அவரது படங்கள் குஷியை ஏற்படுத்தும்.
விட்டலாச்சார்யாவின் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார் என்.டி. ராமராவ். அதனால் அவர் முதல்வரான பின், 'செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பணக்காரர்களிடமிருந்து வாங்கி ஏழைகளுக்கு வசதி செய்து கொடுக்க முயல்வேன்' என்று பேசியபோது, பத்திரிகை கார்ட்டுன்களிலெல்லாம் 'ராமராவ் விட்டலாச்சார்யா படங்களில் நடித்ததை இன்னும் மறக்கவில்லை போலும்' என்று தமாஷாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
இன்னொரு வேடிக்கை, ஆந்திராவில் விட்டலாச்சார்யாவின் படங்கள் வெளியானால் - கிராமப் பகுதிகளில் விலைமாதர்களின் வீடுகளைத் தேடி நிறையப் பேர் வருவார்களாம்!
from தேசிய செய்திகள் https://ift.tt/bHB40RA
0 Comments