நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் சில நபர்களை கைதுசெய்தனர். பிரயாக்ராஜில் ஏற்பட்ட வன்முறைக்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் ஜாவேத் முகமது. அதனால் அவரின் வீடு இடிக்கப்பட்டது. `ஜாவேத் முகமது வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெறவில்லை... அதனால் அவரின் வீட்டை இடித்து விட்டோம்' என அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில், குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி, ``உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிவிட்டார். அவர் யாரையும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பாரா? இடிக்கப்பட்ட வீடு, குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி பெயரில் இருக்கிறது. அரசு திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது'' என்று அரசை சாடினார்
from தேசிய செய்திகள் https://ift.tt/ypLZz5Q
0 Comments