உத்தரப்பிரதேச மாநிலத்தில், காவல் நிலைய லாக்கப்பில் ஆண்கள் பலரை, போலீஸார் கடுமையாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர்.
நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்தினர். இதில், உத்தரப்பிரதேசத்தில் போராட்டமானது கலவரமாக வெடித்தது. பின்னர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, 130-க்கும் மேற்பட்டோரை போலீஸ் கைதுசெய்தது. இந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை நிகழ்ந்த அடுத்த நாளே, பா.ஜ.க எம்.எல்.ஏ ஷலப் மணி திரிபாதி, என்பவர், `கலவரக்காரர்களுக்குப் பரிசு' என்ற தலைப்பில், லாக்கப்பில் ஆண்கள் பலரை போலீஸார் கடுமையாகத் தாக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார்.
उठने चाहिए ऐसी हवालात पर सवालात
— Akhilesh Yadav (@yadavakhilesh) June 11, 2022
नहीं तो इंसाफ़ खो देगा अपना इक़बाल
- यूपी हिरासत में मौतों के मामले में न. 1
- यूपी मानवाधिकार हनन में अव्वल
- यूपी दलित उत्पीड़न में सबसे आगे pic.twitter.com/BCGn93LO49
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச அரசை சாடி ட்வீட் செய்துள்ளார். அதில், ``முதலில் இதுபோன்ற காவல் நிலையங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். லாக்கப் மரணங்களின் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மனித உரிமை மீறல் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதான அடக்குமுறையிலும் உத்தரப்பிரதேச மாநிலம்தான் முதலிடம்" என உத்தரப்பிரதேச அரசை விமர்சித்துள்ளார்.
மேலும் இந்த வீடியோ குறித்து பேசிய சஹாரன்பூர் எஸ்.எஸ்.பி ஆகாஷ் தோமர், ``அந்த வீடியோவை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அது சஹரன்பூர் இல்லை. அதுமட்டுமல்லாமல், இதுகுறித்து விசாரித்த பிறகு போலீஸார் யாரேனும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/9ZDCgAb
0 Comments