சமாஜ்வாடி தலைவரின் `வெளிநாட்டு பயணி’ ட்வீட்... `நான் இந்தியன்’ என பதிலளித்த பெண் - நடந்தது என்ன?

சமாஜ்வாடி கட்சித் தலைவர் மணீஷ் ஜெகன் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் தாஜ்மகாலுக்கு பின்னால் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சுட்டிகாண்பித்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் யோகி ஆதித்யநாத் அரசை குற்றம்சாட்டி ட்வீட் பதிவிட்டிருந்தார். அவரின் அந்த ட்விட்டர் பதிவில், "மாநில பா.ஜ.க அரசு செய்யும் தவறுகளை சுட்டி காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்ளனர்.

பா.ஜ.க ஆட்சியில் யமுனாவில் அசுத்தம் நிரம்பி, தாஜ்மகாலின் அழகுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பா.ஜ.க அரசின் இயலாமையை, தவறை சுட்டிக்காட்டுவது மிகவும் வெட்கக்கேடானது" என்று ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் லிசிப்ரியா என்றும் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், லிசிப்ரியா மணீஷ் ஜெகன் அகர்வால் ட்விட்டர் பதிவை ரீ ட்வீட் செய்து, ``மிக்க நன்றிகள்.... நான் வெளிநாட்டு பயணியல்ல. நான் ஒரு பெருமை மிகு இந்தியர்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு சமாஜ்வாடி கட்சித் தலைவர் மணீஷ் ஜெகன் அகர்வால் ட்விட்டர் பதிவில் யமுனை நதியின் அசுத்தங்களை சுத்தப்படுத்த வேண்டும் என சமூகவலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/lVv3ZN9

Post a Comment

0 Comments