`விவாகரத்தான மனைவியின் உடைமைகள் கணவனுக்குச் சொந்தமில்லை' - கர்நாடக உயர் நீதிமன்றம்

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே திருமணம் ரத்தான பிறகு, மனைவிக்குச் சொந்தமான பொருள்களை, கணவன் வைத்திருக்க முடியாது என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற வழக்குதாரரின் திருமணத்தின்போது, பெண் வீட்டார் தரப்பில் இருந்து, பெண்ணுக்காக வரதட்சணையாக சுமார் 9 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணம் ரத்தானதைத் தொடர்ந்து, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட அந்தத் தொகையை, 9 சதவிகித வட்டியோடு திரும்பத் தருமாறு, மும்பையில் வசித்து வரும் கணவரின் மீது, அவரின் முன்னாள் மனைவி பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடுத்துள்ளார்.

சித்திரிப்பு படம்

கடந்த 2009-ம் ஆண்டில், தன் மாமியார் மற்றும் கணவர் மீது வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2018-ம் ஆண்டில் இப்பெண்ணுக்கு சாதகமாக விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விவாகரத்தின் போது, தன் மனைவிக்கு ஏற்கெனவே 4 லட்ச ரூபாயை ஜீவனாம்சமாக அளித்ததாகத் தெரிவித்து, பெண்ணின் முன்னாள் கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, பெண்ணுக்கு பெற்றோரால் வழங்கப்பட்ட 9 லட்ச ரூபாய், ஜீவனாம்ச தொகையில் இருந்து வேறுபட்டது. "மனைவி கொண்டு வந்த அனைத்து உடமைகளையும், விவாகரத்துக்குப் பின், கணவரின் குடும்பத்தினர் வைத்திருக்க முடியாது" என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/nmYZeIQ

Post a Comment

0 Comments