``வட கர்நாடகாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை..!" - முதல்வர் பசவராஜ் உறுதி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ``வட கர்நாடகாவைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் திட்டம் ஏதும் இல்லை" எனத் தனது கட்சியின் அமைச்சரின் கூற்றுக்குப் பதிலளித்திருக்கிறார்.

முன்னதாக, கர்நாடகாவின் உணவு, கட்டுமானம் விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி, ``பெங்களூரு, தெற்கு கர்நாடக மக்களுக்கு மட்டுமே மையப்படுத்தப்பட்ட இடமாக தற்போது மாறியிருக்கிறது. இதனால் வட கர்நாடகாவில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

அதனால்தான் எங்களுக்குத் தனி மாநிலம் தேவை எனக் கூறுகிறோம். இதுதான் எங்களின் அஜண்டாவும்கூட" எனத் தனி மாநிலக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் கர்நாடக பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ், ``வட கர்நாடகாவைத் தனி மாநிலம் அமைப்பது குறித்து அரசு தரப்பில் எந்த எண்ணமும், திட்டமும் இல்லை. இதுபற்றி உமேஷ் கட்டி பேசுவது இதுவொன்றும் முதல் முறையல்ல. பல ஆண்டுகளாக இதைத்தான் அவர் கூறி வருகிறார். அவரேதான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என உமேஷ் கட்டியின் கூற்றுக்குப் பதிலளித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/EaldwA2

Post a Comment

0 Comments