கர்நாடகா மாநிலம், நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐ.டி.ஐ கல்லூரியில் ஆய்வு பணிக்காச் சென்றிருந்த எம்.எல்.ஏ ஒருவர் அந்தக் கல்லூரியின் முதல்வரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் உள்ள நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐ.டி.ஐ கல்லூரி சமீபத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கல்லூரியை பார்வையிட மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீனிவாஸ் என்பவர் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கணினி ஆய்வகத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வர் சரியான முறையில் பதிலளிக்காத காரணத்தினால் எம்.எல்.ஏ ஸ்ரீநிவாஸ் கோபமடைந்தார்.
JanataDal MLA M Srinivas slaps the Principal of Nalwadi krishnaraja college in Karnataka in infront of everyone
— Sheetal Chopra (@SheetalPronamo) June 21, 2022
This happens when power goes to head
Shame pic.twitter.com/8RTCCud8Mo
முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ, ஒருகட்டத்தில் முதல்வரை கன்னத்தில் அறைந்ததார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்லூரி முதல்வரை எம்.எல்.ஏ கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. எம்.எல்.ஏ-வின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/RK1n9Ns
0 Comments