சமீபத்தில் பாஜக மூத்த எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், 2,500 கோடிக்கு ஈடாக மாநில முதல்வர் பதவியை வழங்குவதாகக் கூறி சிலர் தன்னை அணுகியதாக தெரிவித்தார். இதையடுத்து, சில நாள்களுக்குப் பிறகு இந்த குற்றச்சாட்டு வந்துள்ளது.
கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது, ``பசவராஜ் பொம்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. அவர் பணம் கொடுத்து முதல்வரானவர். அவர் பணத்துக்காக முதல்வராக நியமிக்கப்பட்டவர். அதனால் தான் அவர் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் ஏன் மக்களுக்காக வேலை செய்ய போகிறார். ஆர்எஸ்எஸ்-ன் அறிவுரைகளை பின்பற்றினால் போதும் என்பதற்காக தான், ஆர்எஸ்எஸ் பசவராஜ் பொம்மையை முதலமைச்சராக்கியுள்ளது.
இந்த அரசாங்கத்தினால் நான்கு வருடங்களில் ஒரு வீடு கூட வழங்க முடியவில்லை. இவ்வாறான அரசாங்கம் தொடர வேண்டுமா?... பாஜக அரசு வெட்கப்பட வேண்டும். ஐந்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த நான் 15 லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளேன்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது’’ என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/IMSKsOX
0 Comments