கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, மாட்டிறைச்சி உண்பது குறித்தான தனது நிலைப்பாட்டையும், ஆர்.எஸ்.எஸ் மீது கடும் விமர்சனத்தையும் நேற்று முன்வைத்தார்.
துமகுரு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய சித்தராமையா, ``சக மனிதர்களிடையே ஆர்.எஸ்.எஸ் வேறுபாடுகளை உருவாக்குகின்றனர். நான் ஒரு இந்து. இதுவரையில் நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால், நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். இது என்னுடைய உரிமை மற்றும் என்னுடைய உணவுப் பழக்கம். என்னைக் கேள்வி கேட்க நீ யார்? முஸ்லிம்கள் மட்டுமா மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள். இந்துக்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். கிறிஸ்தவர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்" எனக் கூறினார்.
கர்நாடகாவில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, பசுக்கள் `பாதுகாப்பு மற்றும் படுகொலை தடுப்புச் சட்டம் 2020'-ஐ கடந்த ஆண்டு ஜனவரியில் கொண்டுவந்தது. இந்த சட்டமானது பசுக்கள், காளைகள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்குதல், விற்றல், கொல்லுதல் மற்றும் வியாபாரம் செய்தல் போன்றவற்றைச் சட்டவிரோதம் எனக் கூறுகிறது. மேலும், 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் மட்டுமே இந்த சட்டத்தில் விதிவிலக்கு. அதிலும் கூட, கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் அளித்த பிறகே கால்நடைகளை கொல்ல முடியும். இதனை மீறுபவர்களுக்கு, 3-லிருந்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50,000-லிருந்து ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/un1gPwz
0 Comments