``காஷ்மீர் பண்டிட்களை காப்பாற்ற `காஷ்மீர் பைல்ஸ்' படத்தை தடை செய்ய வேண்டும்!" - ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் பண்டிட்டுகள் சந்தித்த கொடுமைகளைப் பற்றிய கதையை மையமாக வைத்து வெளிவந்திருப்பதாகக் கூறப்படும் படம் `தி காஷ்மீர் ஃபல்ஸ்'. இந்த திரைப்படம் உண்மையை வெளிப்படையாக காண்பிப்பதாக பிரதமர் மோடி பாராட்டியதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டிட் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், ``காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றால், `காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை அரசாங்கம் தடை செய்ய வேண்டும். காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உண்மையா என நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன்? ஒரு முஸ்லிம் முதலில் இந்துவைக் கொன்று, அவருடைய இரத்தத்தை சோற்றில் போட்டு, அவருடைய மனைவியை சாப்பிடச் சொல்கிறார். அப்படி சொல்வாரா? இது நடக்குமா? நாம் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டோமா?... திரைப்படத்தில் பொய்யான சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு அடிப்படையற்ற திரைப்படம். இது நாட்டில் வெறுப்பை மட்டுமே உருவாக்கியிருக்கிறது'' எனத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/kstgGpO

Post a Comment

0 Comments