மும்பை வர்சோவா கடற்கரையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாக்குமூட்டையில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். உடல் கேபிள் வயரால் கட்டப்பட்டிருந்தது. விசார்ணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சோனம் ஸ்ரீகாந்த்(18) என்று தெரியவந்தது. மேற்கொண்டு கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒருவர் பிணம் இருந்த சாக்குமூட்டையை எடுத்து சென்றது தெரியவந்தது.
உடனே அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. பிடிபட்ட நபரின் பெயர் சபித் அன்சாரி(22) என்று தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் அன்சாரியும், சோனமும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். சோனத்திடம், அன்சாரி 5,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை கொடுக்கும்படி சோனம் கேட்டுள்ளார்.
ஆனால், அன்சாரி அதைக் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், பணத்தை கேட்பதற்காக சோனம் கோரேகாவில் உள்ள அன்சாரி வீட்டிற்குச் சென்றார். அங்கு தனது பணத்தை உடனே திரும்ப கொடுக்கும்படி கேட்டார். பணத்தை கொடுக்கவில்லையெனில் போலீஸில் புகார் செய்வேன் என்று சோனம் தெரிவித்திருக்கிறார். இதனால், அன்சாரி தன்னிடம் தற்போது ரூ.2 ஆயிரம்தான் இருக்கிறது என்று கூறி கொடுத்திருக்கிறார். ஆனால், பாக்கிப் பணத்தையும் உடனே கொடுக்கும்படி கேட்டு சோனம் தகராறு செய்திருக்கிறார்.
இதனால், அன்சாரி கோபத்தில் வீட்டில் கிடந்த கேபிள் வயரை எடுத்து சோனம் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து தன் நண்பரிடம் கார் கொடுக்கும்படி கேட்டு வாங்கி வந்து சோனம் உடலை சாக்குமூட்டையில் வைத்து மத் கடற்கரையில் தூக்கி போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. அதையடுத்து, சனிக்கிழமை இரவு அன்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதாக அந்தப் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீரஜ் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/8V4HWSN
0 Comments