மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் டெபாசிட் செய்தவர்களின் ரூ.1.25 கோடியை, தபால் நிலைய சப்-போஸ்ட் மாஸ்டர், ஐபிஎல் சூதாட்டத்தில் செலவழித்தாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக, தபால் நிலையத்தில் டெபாசிட் செய்தவர்கள், பணத்தை செலவழித்தாகக் கூறப்படும் சப்-போஸ்ட் மாஸ்டர் விஷால் அஹிர்வார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இந்தப் புகாரின் பேரில் கடந்த 20-ம் தேதி சப்-போஸ்ட் மாஸ்டர் விஷால் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி அஜய் துர்வே, ``இந்த மாத தொடக்கத்தில் டெபாசிட் செய்தவர்கள், தாங்கள் செலுத்தி வந்த வைப்பு நிதி(FD) தொகை முடிவடைந்ததையொட்டி, தபால் நிலையத்தை தொடர்பு கொண்டிருக்கின்றனர். அப்போது டெபாசிட் செய்தவர்களின் பெயரில் FD இல்லையென்றும் , அவர்களின் FD எண்கள் ஏதும் பதிவேட்டில் இல்லையென, தபால் நிலைய ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் அடுத்த சில நாள்களுக்கு, டெபாசிட் செய்தவர்கள் தங்களின் முதலீடு குறித்து கேட்க திரும்பத் திரும்ப தபால் நிலையம் சென்றபோது, சப்-போஸ்ட் மாஸ்டர் விஷால் அஹிர்வார், அவர்களின் பணத்தை ஐ.பி.எல் சூதாட்ட செயலியில் வைத்து, பணத்தை பெருக்க முயன்றது தெரியவந்தது. அதையடுத்து அவரைக் கைதுசெய்தோம். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனக் கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ad1BWHT
0 Comments