மத்தியப்பிரதேசத்தில் மனநல குறைபாடு உள்ளதாகச் சொல்லப்படும் முதியவர் ஒருவரை, `நீ முகமதுவா?’ எனக் கூறி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான அடுத்த நாளே, அந்த முதியவர் சாலையோரத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச் பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவில், `பெஞ்சில் அமர்ந்திருக்கும் முதியவரை ஒரு நபர் தாக்குகிறார். தொடர்ந்து அந்த நபர், முதியவரிடம் உன் பெயர் என்ன, நீ முகமதுவா? எங்கே உன் ஆதார் கார்டு காட்டு என கூறிக்கொண்டே அடிக்கிறார். மேலும், 200 ரூபாய் காசு எடு என்றவாறு கேட்டுக்கொண்டே மீண்டும் மீண்டும் தாக்குகிறார்'.
இந்த வீடியோ வைரலாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு தான், அந்த முதியவரை காணவில்லை என மானசா போலீஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். ஆனால், திடீரென எதிர்பாராத விதமாக, இந்த வீடியோ வெளியான அடுத்த நாள், ராம்புரா ரோடு மாருதி ஷோரூம் அருகே அந்த முதியவரை, போலீஸ் சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோ மூலம், முதியவரைத் தாக்குபவர் தினேஷ் குஷ்வாஹா என்றும், அவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் கணவர் என்றும் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, தினேஷ் குஷ்வாஹா மீது பிரிவு 302 கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/CLFiIRg
0 Comments