``நீங்கள்தான் எங்கள் இலக்கு" - காஷ்மீர் பண்டிட்களுக்கு வந்த மிரட்டல் கடிதம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹவால் ட்ரான்சிட் விடுதியில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஹவால் ட்ரான்சிட் காலணியின் தலைவருக்கு லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு அனுப்பிய கடிதத்தில், "ஆர்.எஸ்.எஸ் முகவர்கள் மற்றும் காஷ்மீருக்குப் புலம்பெயர்ந்தோர் இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ளுங்கள்.

மிரட்டல் கடிதம்

காஷ்மீரில் மற்றுமொரு இஸ்ரேல் வேண்டும் என முஸ்லிம்களைக் கொல்ல விரும்பும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு காஷ்மீரில் இடமில்லை. உங்கள் பாதுகாப்பை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரித்துக்கொள்ளவும். நீங்கள்தான் எங்கள் இலக்கு . எனவே, நீங்கள் இறக்கப்போகிறீர்கள்"என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த காஷ்மீர் பண்டிட் ராகுல் பட்

கடந்த வியாழக்கிழமை பிற்பகல், மத்திய காஷ்மீரின் சதூரா பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த அரசு ஊழியர் ராகுல் பட் என்ற காஷ்மீரி பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு 'காஷ்மீர் டைகர்ஸ்' என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/W7EvlTV

Post a Comment

0 Comments