நீதிமன்ற அவமதிப்பு: 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாத சிறை, தலா ₹2,000 அபராதம்!

அக்டோபர் 22, 2019ம் ஆண்டு ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், கிராம வேளாண்மை உதவியாளர் (கிரேடு-2) பதவிக்கு மனுதாரரின் வேட்புமனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதையடுத்து கடந்த 2020-ல் மனுதாரர் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம்

இதை விசாரித்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவானந்த், இதில் சம்பந்தப்பட்ட சிறப்புத் தலைமைச் செயலர் (வேளாண்மை) பூனம் மலகொண்டையா, அப்போதைய வேளாண்மைத்துறை சிறப்பு ஆணையர் எச்.அருண்குமார், அப்போதைய கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஜி.வீரபாண்டியன் உள்ளிட்ட மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யதாக அவர்களுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், தலா ₹2,000 அபராதமும் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றிப் பேசிய நீதிபதி பி.தேவானந்த், "இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அதைச் செயல்படுத்துவதும் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிப்பவர்களின் கடமையாகும்" என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/UVBEQwJ

Post a Comment

0 Comments