ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த வாரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் எம்.என்.மணி பரிதாபமாக உயிரிழந்திருந்தார். அது சம்பவம் விபத்தா? அல்லது பயங்கரவாதிகளின் திட்டமிடப்பட்ட சதிச் செயலா? என விசாரணையின் நடந்துவரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் சத்தா முகாம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தா முகாம் அருகே இன்று அதிகாலையில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாரா நேரத்தில் ஏற்பட்ட இந்த தாக்குதலில் , சி.ஐ.எஸ்.எஃப்-ஐ சேர்ந்த வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், ஜம்மு காஷ்மீரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே இன்று அதிகாலை, பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனிடையே, இரண்டு தீவிரவாதிகள் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் திவாஸ் தினத்தையொட்டி வரும் 24-ம் தேதி, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு வரவிருக்கும் நிலையில், இதுபோன்ற தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/Txfp9FP
0 Comments