ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டம் அமராபுரி கிராமத்தில், குடும்பத்தினரால் தனக்கு நிச்சயிக்கப்பட்ட 25 வயது இளைஞரை, இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்கும் நிச்சயம் முடிந்து, வரும் மே மாதம் திருமணம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அதை காதில் வாங்கிக் கொள்ளாத பெற்றோர், ``நாங்கள் தேர்வு செய்தவரைத் தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர். அதனால், வேறுவழியில்லாமல் அந்த இளைஞருடன் அந்தப் பெண் பழகி வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், அந்தப் பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞரை திட்டமிட்டு கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``அந்தப் பெண் வருங்கால கணவனை, நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகக் கூறி அவரை அமரபுரி மலையிலுள்ள ஆசிரமத்திற்கு தனியே அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் மலையில் பரிசு தருவதாகக் கூறி இளைஞனின் கண்களைத் துப்பட்டாவால் கட்டி, அவர் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து அந்தப் பெண் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. கழுத்து அறுபட்ட இளைஞனின் கதறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அதிக ரத்தக்கசிவின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்" என்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/wUZayOJ
0 Comments