``மதரஸா பள்ளிகளை மூட வேண்டும்!"- கர்நாடக பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அந்த மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அரசின் அந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வாதத்தில் சரியான முகாந்திரங்கள் இல்லையென்று கூறி மாநில அரசு பிறப்பித்த ஹிஜாப் தடை செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.

ஹிஜாப் சர்ச்சை

அதையடுத்து, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்ப்பு முஸ்லிம் மாணவிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் இந்து கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் போடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது இந்த விவகாரத்தில் மேலும் பதற்ற நிலையை அதிகரித்திருந்தது.

கர்நாடகா

இந்த நிலையில், அண்மையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மதரஸாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று பேசியிருப்பது அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தாவணகரே மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும், அந்த மாநில முதலமைச்சரின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா, ``மதரஸா பள்ளிகளில் அப்பாவி மாணவர்களிடையே தேச விரோத பிரசாரம் செய்யப்படுகின்றன. அங்கு வன்முறையைத் தூண்டும் வகையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. எனவே, மதரஸாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/2LVhABF

Post a Comment

0 Comments