கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வருபவர் கீதா. சிறுவயது முதலே நடனக்கலை மீது அதீத ஆர்வம் கொண்டவரான இவர், பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடனத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆட்சியர் பணிக்கு வந்த பின்பும், கிடைக்கும் நேரத்தில் நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் கீதா. மேலும், கேரள மக்களின் பாரம்பர்ய நடனங்களில் ஒன்றான கதகளி நடனத்தைக் கற்று வந்தார்.
இந்நிலையில், வயநாட்டில் உள்ள வள்ளியூர் காவு கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஆட்சியர் கீதா, தமயந்தி வேடம் அணிந்து தனது முதல் கதகளி நடனத்தை மேடையில் அரங்கேற்றம் செய்தார். நேர்த்தியான கதகளி ஒப்பனையுடன் மேடையில் அரங்கேற்றம் செய்த வயநாடு ஆட்சியர் கீதாவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரது கதகளி நடன வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கதகளி அரங்கேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கீதா, ``கதகளி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை.
கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி கதகளியைக் கற்றுக்கொண்டேன். சக கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நடனக்கலை நமக்கு நல்ல இளைப்பாறுதலாக இருக்கிறது" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/vpSLNkI
0 Comments