காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தைத் தழுவிய கதை அம்சத்தைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களை இந்த திரைப்படம் பெற்றுவரும் நிலையில், நேற்று மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தை அனைத்து மக்களும் பார்க்க வேண்டும். இந்த படத்திற்கு 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும்''என்று பதிவிட்டிருந்தார்.
Movie #TheKashmirFiles is heart-wrenching narration of the pain, suffering, struggle, and trauma faced by Kashmiri Hindus in the 90s.
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 13, 2022
This needs to be watched by maximum people, hence we have decided to make it a tax-free in the state of Madhya Pradesh.
மேலும், அந்த மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மத்தியப் பிரதேச காவல்துறையினருக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்க்க விடுமுறை அளிக்கப்படும். அதற்கான உத்தரவுகள் காவல்துறை தலைமை இயக்குநர் சுதிர் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். முன்னதாக ஹரியானா, குஜராத் மாநில அரசுகள் இந்த படத்திற்கு வரி விலக்கை அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/EUq5aeD
0 Comments