மும்பையின் தென்பகுதியில் வசிப்பவர் பிரத் திவாரி(30). இவர் தனது வீட்டில் ரோனி என்ற வளர்ப்பு நாயை வளர்த்து வந்தார். ரோனி கடந்த சில நாள்களாக மிகவும் பலவீனமாக இருந்தது. அடிக்கடி மயங்கி விழுந்தது. உடனே பிரத் தனது செல்லப்பிராணியை பரேலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்தார்.
12 வயதாகும் ரோனியை டாக்டர்கள் சோதனை செய்து பார்த்ததில் வெளித்தோற்றத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இதையடுத்து இசிஜி எடுத்துப் பார்க்கப்பட்டது. அதில், நாயின் இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக 120 முதல் 150 முறை இதயத் துடிப்பு இருக்கவேண்டும். ஆனால் ரோனிக்கு இதயத் துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது. நாய்க்கு ஆபரேஷன் செய்து பேஸ்மேக்கர் பொருத்துவதன் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கால்நடை மருத்துவர் சங்கீதா தெரிவித்தார்.
நாயின் 12 வயது என்பது, மனிதர்களுக்கு 70 வயதைப் போன்றது. நாயின் வயதை கருத்தில் கொண்டு அதற்கு பேஸ்மேக்கர் பொருத்த திவாரி குடும்பத்தினர் சம்மதித்தனர். அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் மட்டும் ரோனி மூன்று முறை மயங்கி விழுந்தது. ஆபரேஷனுக்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் அம்மருந்தை கொடுப்பது டாக்டர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது.
டாக்டர் ஆசிஷ் நபாரின் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர் நுபூர் தேசாய் ரோனிக்கு பேஸ்மேக்கர் பொருத்தினார். ஆபரேஷனுக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் பயிற்சி பெற்ற டாக்டர்கள் வெற்றிகரமாக ஆபரேஷனை செய்து முடித்தனர்.
தற்போது ரோனி வீட்டில் குணமடைந்து வருகிறது. திவாரியின் விட்டுக்குக், குட்டியாக இருந்தபோது இந்த நாய் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து குடும்பத்தில் ஒரு நபராக இருந்து வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/5LlhaJI
0 Comments