ம.பி: ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்ட பட்டியலின சமூக ஆர்வலர்; சிறுநீர் குடிக்க வற்புறுத்திய கொடூரம்!

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள பனிஹார் கிராமத்தில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆர்..டிஐ செயற்பாட்டாளர் சஷிகாந்த் ஜாதவ், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிராம பஞ்சாயத்து குறித்து தகவல் கேட்டிருக்கிறார். அதனால், ஆத்திரமடைந்த கிராம பஞ்சாயத்தினர் சிலர் அவரை கடுமையாகத் தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, தன் கணவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து சஷிகாந்த் ஜாதவின் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், ``கடந்த 23-ம் தேதியன்று, என் கணவர் சஷிகாந்த் ஜாதவ் பாஹ்ரி கிராம பஞ்சாயத்து தொடர்பான தகவல்களைக் கேட்டதால், கிராம பஞ்சாயத்தினர் 7 பேர் அவரை தனி அறையில் அடைத்து வைத்து கடுமையாகத் தாக்கினார்கள்.

கைது

பின்னர் என் கணவரின் ஷூவில் சிறுநீரை நிரப்பி குடிக்க துன்புறுத்தினார்கள்" என்று சஷிகாந்த் ஜாதவ் மனைவி குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, தன்னிச்சையாகக் காயப்படுத்துதல், கலவரம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரில் 2 பேரைக் கைது செய்திருப்பதாகக் காவல் ஆய்வாளர் பிரவீன் ஷர்மா நேற்று கூறியுள்ளார்.

ஆர்.டி.ஐ ஆர்வலர் மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/aMOmULN

Post a Comment

0 Comments