மும்பை அந்தேரி பகுதியில் உள்ள செவன் பங்களா பகுதியை சேர்ந்த சூரஜ் என்பவர் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் அவரின் நண்பர் அஜய் சிங்கும் அவரின் நண்பர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சூரஜ் வருவதை பார்த்த அஜய்யும் அவரின் நண்பர்களும் சேர்ந்து சூரஜ்ஜை நிறுத்தி மது வாங்க பணம் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சூரஜ் பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் மது வாங்க பணம் கேட்டவர்கள் தங்களிடம் இருந்த கம்பால் சூரஜ்ஜை அடித்தனர். இதில் சூரஜ் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அஜய்யும் அவரின் நண்பர்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் இந்த சம்பவம் குறித்து தனது மற்றொரு நண்பரிடம் தெரிவித்தார்.
அந்த நண்பர் இது குறித்து சூரஜ் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். அவர்கள் விரைந்து வந்து சூரஜ்ஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சூரஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூரஜ் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இக்கொலை தொடர்பாக சூரஜ் நண்பர்கள் அஜய் உட்பட எட்டு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/70OVlgD
0 Comments