பீர் பார் லைசென்ஸ் ரத்து... துறை மாற்ற நடவடிக்கை; ஆர்யனைக் கைதுசெய்த அதிகாரி சமீருக்கு சிக்கல்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் மகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கப்பலில் கைது செய்யப்பட்டார். ஒரு மாத சிறைக்கு பிறகு ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்யன் கான் கைது விவகாரத்தில் முன்னின்று செயல்பட்டவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. ஆர்யன் கான் கைது சம்பவத்திற்கு பிறகு சமீர் வான்கடேசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ச்சியாக சமீர் வான்கடே சாதி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததோடு, சமீர் வான்கடே ஆர்யன் கானை விடுவிக்க பணம் கேட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

பீர் பார் லைசென்ஸில் மோசடி

இந்த நிலையில், சமீர் வான்கடே பெயரில் 1997-ம் ஆண்டு அவர் தந்தை நவிமும்பையில் பீர் பார் லைசென்ஸ் ஒன்றை எடுத்திருந்தார். அப்போது சமீர் வாங்கடேவுக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்கவில்லை.

சமீர் வான்கடே

ஆனால், பீர் பார் லைசென்ஸ் வாங்க 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதனால், சமீர் வான்கடே மைனராக இருந்த போது இந்த லைசென்ஸ் மோசடியாக வாங்கப்பட்டது விசாரணையில் உறுதியானதால் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரின் பார் லைசென்ஸை ரத்து செய்து உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பாக மாநில கலால் வரித்துறை அதிகாரி வினய்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சமீர் வான்கடே மீது மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த பீர் பார் பிரச்னையையும் அமைச்சர் நவாப் மாலிக்தான் வெளியில் கொண்டு வந்தார். அரசு அதிகாரியாக இருந்து கொண்டு பீர் பார் நடத்த லைசென்ஸ் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ச்சியான சர்ச்சைகளால் தற்போது சமீர் வான்கடே வேறு துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/KALu2wD

Post a Comment

0 Comments