காவிக்கொடி சர்ச்சைப் பேச்சு: `அமைச்சர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்!' - சித்தராமையா

``ஒருநாள் இந்தியாவின் தேசியக் கொடியாகக் காவிக்கொடி இருக்கும். செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் நாள் வரும். ஆனால், மூவர்ணக்கொடியை அனைவரும் மதிக்க வேண்டும்'' என கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரின் சர்ச்சை பேச்சைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை முன்வைத்தனர்.

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய சித்தராமையா, ``ஹிஜாப் விவகாரம் பா.ஜ.க அரசால் உருவாக்கப்பட்டதுதான். மாணவர்களை கல்லூரிகளுக்கு காவித் துண்டு அணிவித்து அனுப்பியவர்கள் அவர்கள்தான். எதிர்காலத்தில் காவிக்கொடி தேசியக்கொடியாக மாறலாம் என்று பேசிய அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யவேண்டும். குடியரசுத் தின விழா அணிவகுப்பின் போது சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவின் சிலை நிராகரிக்கப்பட்டதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/f8Jbiuy

Post a Comment

0 Comments