`பாஜக அரசு தேசத்தின் சொத்துகளை தனியாருக்கு விற்று வருகிறது' - அகிலேஷ் யாதவ் தாக்கு!

உத்தரப்பிரதேசத்தில் வரும் 27-ம் தேதி 5-வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,``பா.ஜ.க அரசு மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தி 750 விவசாயிகளைக் கொன்றது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்து உங்களுடைய நிலத்தை விற்பனை செய்துவிடும்.

மோடி..!

பா.ஜ.க அரசு நாட்டில் உள்ள இளைஞர்களுக்குச் சரியான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. தேசத்தின் சொத்துகளான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத பா.ஜ.க அரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/biDEgKu

Post a Comment

0 Comments