கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அளவில் இந்த பிரச்னை பேசுபொருளாக மாறியது. இதை எதிர்த்து அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க இருக்கிறது.
இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவாகரத்தில் தலையிடுவது முறையில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/tmviWup
0 Comments