உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் நடைபெறவுள்ள மற்ற தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலி வாயிலாகப் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது. மத்திய அரசில் சுமார் 12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், அரசு அதை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, மக்கள் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் கூட இல்லாமல் கஷ்டப்பட்டனர். மேலும் சிலர் உயிரிழந்தனர். மறுபுறம், தொற்றுநோய் பலரின் வேலை மற்றும் வணிகத்தையும் சீர்குலைத்துவிட்டது. அதே நேரத்தில் பலர் ஊரடங்கு காலகட்டத்தின் போது மக்கள் பல மைல்களுக்கு கால்நடையாக நடந்து சென்றனர். உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களை பிளவுபடுத்துவதை தவிர, வேறு எதையும் செய்யவில்லை. மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/C3ynbRr
0 Comments