உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளும் எதிர் தரப்பில் இருந்து தலைவர்களை இழுக்கும் பணியில் ஈடுபட்டன. இதில் பாஜகவில் இருந்த முக்கிய பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் சமாஜ்வாடி கட்சிக்கு தாவினர். இதையடுத்து முலாயம் சிங் மருமகள் அபர்ணா யாதவை பாஜக தங்களது பக்கம் இழுத்துக்கொண்டு வந்தது. அவருக்கு லக்னோவில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக கூறித்தான் பாஜகவிற்கு அழைத்து வந்ததாக சொல்லப்பட்டது.
கடந்த தேர்தலில் அபர்ணா லக்னோ கண்டோமெண்ட் தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். தற்போது பாஜக லக்னோவில் உள்ள 17 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் அபர்ணாவிற்கு எந்த தொகுதியும் கொடுக்கப்படவில்லை. இதனால் அபர்ணா அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவருக்கு சட்டமேலவை அல்லது வேறு எதாவது பதவி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் மாநில அமைச்சர் பிரிஜேஷ் பதக் என்பவரை பாஜக நிறுத்தி இருக்கிறது. பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அமலாக்கப்பிரிவு இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங்கிற்கும் இத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ராஜேஷ்வர் சிங்கிற்கு சரோஜினி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஏர்செல் வழக்கை விசாரித்த முக்கிய அதிகாரியாவார். அதோடு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நடந்ததாக கூறப்படும் ஒவ்வொரு ஊழல் வழக்கு விசாரணை குழுவிலும் ராஜேஷ்வர் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் மாநில அமைச்சர் ஸ்வாதி சிங்கும், அவரது கணவர் தயா சிங்கும் போட்டியிட திட்டமிட்டு இருந்தனர். அமைச்சர் அஸ்தோஷ் தண்டனுக்கு லக்னோ கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்தல் பிரசார நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று முதல் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஆக்ராவில் தனது கட்சியின் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். ஆக்ராவில் தலித் மக்கள் அதிகம் இருப்பதால் தனது பிரசாரத்தை அங்கிருந்து தொடங்க மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/TESZ4oBPu
0 Comments