பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ரியா பிள்ளை என்கிற மாடலை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் சேர்ந்து வாழ்ந்தனர். 2015ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு, அதற்குப் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். லியாண்டர் பயஸ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தந்தைக்குரிய கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகவும் ரியா பிள்ளை குற்றம் சாட்டினார். மற்றொரு புறம் ரியா பிள்ளை மற்றும் அவரின் முன்னாள் கணவர் குறித்து லியாண்டர் பயஸ் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் லியாண்டர் பயஸ் மீது ரியா பிள்ளை மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்காக லியாண்டர் பயஸ் பல முறை கோர்ட்டில் ஆஜரானார். இவ்வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது இதில் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இதில் லியாண்டர் பயஸ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரியா பிள்ளைக்கு லியாண்டர் பயஸ் ஜீவனாம்சமாக ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொகையை 5 சதவிகிதம் அதிகரித்து கொடுக்கவேண்டும் என்றும் இதன் மூலம் அடிக்கடி கோர்ட்டிற்கு வருவது தடுக்கப்படும் என்றும், இதனுடன் வாடகையாக மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் தற்போது ரியா பிள்ளை இருக்கும் லியாண்டர் பயஸ் இல்லத்தை ரியா பிள்ளை காலி செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இது தவிர இருவருக்கும் பிறந்த மகள் 18 வயதை பூர்த்தி செய்யும் வரை அவரின் படிப்பு செலவு உட்பட அனைத்து செலவுகளையும் லியாண்டர் பயஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/STUyLeb
0 Comments