`சுல்லி டீல்ஸ்' (Sulli deals) என்ற ஆப்பில் `டீல் ஆஃப் த டே' எனக் குறிப்பிட்டு முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டும் அவ்வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது, அந்த ஆப்பை உருவாக்கிய 25 வயது பி.சி.ஏ பட்டதாரியான அம்கரேஷ்வரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் வகையில் சமீபத்தில் `புல்லி பாய்' என்ற ஆப்பில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு ஏலம் விடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெங்களூரு மற்றும் உத்தரகாண்டில் மூன்று மாணவர்களைக் கைது செய்துள்ளனர். டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அசாம் மாநிலத்தை சேர்ந்த நீரஜ் என்ற மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read: `புல்லி பாய்' ஆப் உருவாக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை!' - கைதான அசாம் மாணவர் நீரஜ்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பை போலீஸார் கைது செய்த ஸ்வேதா சிங்கின் ட்விட்டர் கணக்கை தான் கையாண்டு வருவதை ஒப்புக்கொண்டார். ஸ்வேதாவின் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி `புல்லி பாய்' ஆப்பில் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதோடு போலீஸ் காவலில் இருந்தபோது நீரஜ் இரண்டு முறை தற்கொலைக்கும் முயன்றதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். நீரஜிடம் விசாரிக்க அவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று மும்பை போலீஸார் டெல்லி போலீஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, நீரஜிடம் விசாரணை நடத்தியதன் தொடர்ச்சியாக இந்தூரை சேர்ந்த அம்கரேஷ்வர் என்பவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். `புல்லி பாய்' ஆப் போல, கடந்த வருடம் ஜூலை மாதம் `சுல்லி டீல்ஸ்' என்ற ஆப்பில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு, ஏலம் விடப்படுவதாகக் குறிப்பிட்டு அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர்.
Also Read: முஸ்லிம் பெண்களை இழுவுபடுத்திய `புல்லி பாய்' ஆப்; முக்கியக் குற்றவாளி அசாமில் கைது!
அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கழித்துவிட்டன. இந்நிலையில், அந்த ஆப் உருவாக்கியதில் மூளையாக செயல்பட்ட அம்கரேஷ்வரை கைது செய்துள்ளதாக டெல்லி டிசிபி மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அம்கரேஷ்வர் ட்விட்டரில் உள்ள டிரேட் குரூப்பில் உறுப்பினராக இருக்கிறார். டிரேட் குரூப், முஸ்லிம் பெண்களை மோசமாக சித்திரிக்க உருவாக்கப்பட்ட குரூப்.
`சுல்லி டீல்ஸ்' மற்றும் `புல்லி பாய்' ஆகிய இரண்டு ஆப்களும் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதால் கைது செய்யப்பட்டவர்கள் இணைந்துதான் இரண்டையும் உருவாக்கினார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3zKPFOT
0 Comments